25 நாட்களில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : மனைவியை கொடூரமாக கொன்ற புதுமாப்பிள்ளை!!

720

தமிழகத்தில் திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு.

இவருக்கு கடந்த மே 30-ம் தேதி வேலம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், வேலம்மாள் வேறு ஒரு நபருடன் போனில் பேசியதை பார்த்த பாலகுரு கோபமடைந்தார்.

இதனால், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார் பாலகுரு. இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பின்னர் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

பின்னர், தானாகவே காவல்நிலையம் சென்று நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ள சரணடைந்துள்ளார். இதனையடுத்து இவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணமாகி 25 நாட்களிலேயே திருமண வாழ்க்கை முடிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.