28 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் : போலீஸ் எடுத்த அதிரடி முடிவால் திகைத்து போன வாலிபர்கள்!!

289

மத்திய பிரதேசம்….

மத்திய பிரதேச மாநிலம், ஹவ்ஷங்காபாத் மாவட்டம் சொஹக்பூரை சேர்ந்த 28 வயது பெண் தனது நண்பர் ஒருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது, அந்த பெண்ணுடன் பழகி வந்த அப்துல் உஸ்மான் என்ற நபர்.. கடந்த சனிக்கிழமை சுற்றுலா செல்வதாக கூறி அந்த பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

காரில் அப்துல்லாவின் கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஜஹா ஆகியோரும் பயணித்துள்ளனர்.

ஷிஹிர்சாகர் என்ற பகுதிக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை அப்துல்லா மற்றும் அவரின் கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஜஹா ஆகியோர் கூட்டு பலத்தகாரம் செய்துள்ளார். மேலும் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர்.

இதை தொடர்நது, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

விசாரணையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமையில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அப்துல் வீட்டை போலீசார் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வீடு கெட்டியது தெரியவந்ததை அடுத்து இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.