28 வயது ஆசிய இளைஞரை மணக்க விமானத்தில் பறந்து வந்த 83 வயது பெண் : பாரம்பரிய முறையில் திருமணம்!!

1253

போலாந்து..

போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயது பெண் விமானத்தில் பறந்து வந்த ஆசிய இளைஞரை கரம் பிடித்துள்ளார்.

Hafiz Muhammad Nadeem (28) என்ற இளைஞர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவருக்கும் Broma (83) என்ற பெண்ணிற்கும் சமூகவலைதளம் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலானது.

இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இந்த நிலையில் Hafiz – Broma இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி Broma விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த நிகழ்வின் போது Broma தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார். Hafiz தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு Broma-வை மணந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டிருந்தோம். நான் ஆட்டோ மெக்கானிக்காக உள்ளேன் என கூறியுள்ளார்.