29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை!!

1080

Castaway என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போலவே 29 ஆண்டுகளாக மனிதர்கள் யாருமற்ற தீவில் தனியாக வசித்துவரும் Mauro Morandi (79)விற்கு புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Corsica மற்றும் Sardinia ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையில் அமைந்துள்ளது Isle of Budelli என்னும் தீவு.

50 வயதாக இருக்கும்போது தனது படகின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவுக்கு வந்திறங்கிய Mauro, தீவின் அழகில் தன்னையே பறிகொடுத்துவிட்டார்.

அங்கு தீவைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மனிதர் ஓய்வு பெறுவதை அறிந்த Mauro, அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

தினமும் ரோஜா நிறத்தில் விடியும் காலைப்பொழுதுகளை 29 வருடங்களாகத் தான் மட்டும் கண்டு ரசித்துக் கொண்டிருந்த Mauro, சமீபத்தில் தான் கண்ட காட்சிகளை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்று எண்ணி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றத் தொடங்கினார்.

பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். பலர் தீவுக்கு சுற்றுலா வரத் தொடங்கினர். குளிர் காலத்தில் தனியாக இருக்கும் அவரைக் காண வெயில் காலத்தில் 1300 பேர் வரை வந்துள்ளனர்.

அமைதி விரும்பியாக இருந்த Mauro பிரபலமாகத் தொடங்கும் நேரத்தில் புதிதாக ஒரு பிரச்சினை வந்துள்ளது.

அது என்னவென்றால், அரசு இந்த தீவை பொறுப்பெடுத்துக் கொண்டு La Maddalena National Parkஇன் ஒரு பகுதியான சுற்றுலாத்தலமாக மாற்றிவிட்டது.

இதனால் அவர் இனி தொடர்ந்து இங்கே வாழ அனுமதிக்கப்படுவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

அரசின் முடிவை எதிர்த்து 18000பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

La Maddalena National Parkஇன் புதிய பொறுப்பாளர், தான் தீவில் வசிப்பது குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை எதிர்பார்த்து Mauro காத்திருக்கிறார்.