3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை… துக்கம் தாங்காமல் பாச மகன் எடுத்த விபரீத முடிவு : உறவினர்கள் சோகம்!!

1237

திருவள்ளூர்…

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வருணின் தாய் குடும்ப பிரச்சனை காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மகன் வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று வீட்டில் தனியாக இருந்த வருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை சொக்கலிங்கம் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த போலிஸார் வருண் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் தாய் இறந்த துக்கத்தில் வருண் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் வருண் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.