3 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மகன் : தினம்தோறும் பாசப்போராட்டம் நடத்தும் தந்தை!!

431

பிரித்தானியாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மகனுக்காக, மாதந்தோறும் அவனது வீட்டை பராமரித்து வாடகை செலுத்தி வந்துள்ள தந்தையின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவின் Newcastle பகுதியில் வசித்து வரும், 61 வயதான Michael Whinham, 3 வருடங்களுக்கு முன்பு 31 வயதில் காணாமல் போன தனது மகன் Paul-ன் வீட்டினை இன்றும் பராமரித்து வருவதோடு, அவனது வீட்டிற்கும் தொடர்ந்து வாடகை செலுத்தி வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதியன்று, மனநல கோளாறினாளால் Paul வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். Newcastle Crown Court பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி புகைப்படத்தினை வைத்து காவல்துறையினர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். Paul 5 அடி 11 இன்ச் உயரத்தில் தட்டையான உடலமைப்பில் இருப்பான் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவனது தந்தை Michael Whinham கூறுகையில், “என்னுடைய மகன் வீட்டிற்கு இன்றும் வாடகை செலுத்தி வருகிறேன். அதற்காக அவன் திரும்பி வரவேண்டும் என நான் விரும்பவில்லை. ஆனால் அவன் வீடு இல்லாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. அவன் ஒருவேளை வர விரும்பினால் அவன் தெரிந்து கொள்ளட்டும் அவனுக்காக ஒரு வீடு இருக்கிறது என்பதை” என தெரிவித்தார்.

மேலும் அவனது வீட்டில் தற்போது ஏராளமான கிறிஸ்துமஸ் அட்டைகள் மற்றும் பிறந்தநாள் பரிசுகள் வந்து குவிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், காணாமல் போன paul குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தங்களுக்கு சிறிய தகவல் கிடைத்தாலும் மிக்க உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.