30 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் காலடி பதிக்கும் பிரபல நடிகை!!

418

அமலா…

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு விலகி காணப்படுவார்கள்.

அப்படியான நிலையில் வயதானபின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுப்பார்கள்.

அந்தவரிசையில், 1986ல் வெளியான மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக களம் கண்டவர் நடிகை அமலா.

முன்னணி நடிகர்கள், விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு என அவர்களுடன் ஜோடியிட்டு நடித்து வந்தார். இதையடுத்து 1992ல் தமிழ் தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி சில சீரியல்களிலும் தெலுங்கு, மலையாள போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வந்தார்.

நாக சைதன்யா, அகில் என்ற இரு மகன்களை வளர்ந்து நடிகை சமந்தாவை மகன் நாக சைதன்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

தற்போது இருவருக்கும் ஏற்பட்ட விவாகரத்து கிசுகிசுக்களுக்கு இவரும் அமைதியாக இருந்து வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் விலகி 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படத்தில் நடிக்க படப்பினை ஆரம்பித்துள்ளார் அமலா. சமீபத்தில் அப்படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.