30 வயதுக்கு மேல் திருமணம் செய்யலாம் என நினைப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.. இவ்வளவு சிக்கல் இருக்குன்னு தெரியுமா?

346

திருமணம்…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான்.

அதிலும் இன்று சொந்த, பந்தங்கள் கூடி, ஊரே திரண்டு நடத்திவைக்கும் திருமணங்களில் பலரும் கணவன், மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். இது எவ்வளவு அபத்தம்? எங்கே இதன் சிக்கல் துவங்குகிறது?

திருமண வயதை அடைந்த ஆண்கள் திருமணத்துக்கு முன்பு நிச்சயமாக சிலவிசயங்களை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் மன உலைச்சலோடு வாழ பழக வேண்டும். அதற்குள் மூழ்கக்கூடாது. முப்பது வயது வரை கருத்தரிக்கும் தன்மை மிக ஆரோக்கியமாக இருக்கும். அந்த வயதைக் கடந்துபோகும் போது தான் எல்லாவிதமான பிரச்னைகளையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இதுதெரியாமல் சிலர் 30 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யவேண்டும் என லட்சியத்துடன் வாழ்கின்றனர். அவர்களுக்கான ஸ்பெசல் பதிவு தான் இது.

வயது ஏற, ஏற பெண்களுக்கு கரு உருவாகும் திறன் குறைவது போல, ஆண்களுக்கும் வயது ஏற, ஏற கருவுறும் திறன் குறையும். 40 வயது கடந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பெண்கள் மிகத் தாமதமாகவே கறுவுறுவது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதே 25 முதல் 30 வயதுக்குள் ஆண்களை திருமணம் செய்யும்போது கறுவுறுதல் சீக்கிரம் நடந்துவிடுகிறது.

கருவுறுதலுக்கு முக்கியப்பங்கு வகிக்கும், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் வீதம் குறைந்துகொண்டே வருகிறது. அதேபோல் 30 வயதுக்கு மேல் விந்தணுக்களின் உற்பத்தியும் குறைகிறது. 35 வயதுக்கு மேல் கடந்தோருக்கு விந்தணுக்களின் தரமும் குறைந்துவிடுகிறது 25 வயதில் இருந்து 30 வரைதான் விந்தணுக்கள் மிகத் தரமான முறையில் இருக்கும்.

எப்போதும் இறுக்கமான உடைகளை அணிந்து இருப்பது, போதிய சத்தான உணவினை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, புகைப்பிடிப்பது, தூங்காமல் இருப்பது ஆகியவையும் கருவுறாமல் இருக்கக் காரணமாகிறது. 30 வயதுக்கு முன்பாக ஆண்கள் கல்யாணம் செய்துகொள்வது அந்தவகையில் மிகவும் கட்டாயம் ஆகும். ஆகவே, சீக்கிரமே திருமணம் செய்துகொண்டு குழஎதை குட்டிகளோடு மகிழ்ச்சியாக இருங்கள்.