தமன்னா…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்தின் பல படங்கள் மற்றமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறார்.
நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் இந்தியில் இருந்து தமிழில் ரீமேக்கானாலும், அஜித்தின் வேதாளம் படமும் ரீமேக்க்காகவுள்ளது.
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவி வேதாளம் படத்தின் ரீமேக் படமான போலா ஷங்கர் என்ற பெயரில் நடிக்கவுள்ளார்.
லட்சுமி மேனனின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் ஆடிஷன் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ருதிஹாசன் ரோலுக்கு யார் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை தமன்னா நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்கு பிறகு நடிகை தமன்னா இரண்டாம் முறை இணைந்துள்ளார்.