திரிஷா..
2000, 2010 களில் கடந்த பத்து வருடங்களாவே ஒட்டு மொத்த திரையுலகையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். யாரென்று தெரியாமல் இருந்த இவர் காலப்போக்கில் ஒட்டு மொத்த சினிமா உலகமே தேடப்படும் நடிகையாக வலம் வந்தார்.
அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவரின் கெரியரில் நிறைய படங்கள் பெயர் சொல்லும் படங்களாவே அமைந்தது. சாமி, ஆறு, உனக்கும் எனக்கும், அபியும் நானும், 96, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இவரின் பவ்யமான நடிப்பை வெளிப்படுத்துபவையாக அமைந்தன்.
பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கமல்,ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எந்த நடிகரையும் விட்டு வைக்காமல் அனைத்து நடிகர்களுடனும் டூயட் பாடியுள்ளார். நிறைய புது முகங்கள் வருகையால் மார்க்கெட் இழந்தார்.
நடிப்பிற்கு நீண்ட இடைவெளி கொடுத்து விடுமுறையை கழிக்க வெளியூர் பயணம் மேற்கொண்டார். தற்சமயம் கூட அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,
தற்போது அமெரிக்காவில் தான சென்றுள்ள இடங்களை எல்லாம் கவர் ஆகுற மாதிரியான ஒரு வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். மேலும் ஆர்ம்பகாலத்தில் எப்படி இருந்தாரோ அதே இளமையோடு பார்க்க செம க்யூட்டாக இருக்கிறார் திர்ஷா.
View this post on Instagram