38 வயதில் திருமணத்திற்கு தயாராகும் நடிகை!!

1158

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை கெளசல்யா , தற்போது திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

நடிகை கெளசல்யா , தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர், காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக கேரள சென்ற கெளசல்யா , தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன்.

எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த கெளசல்யா வுக்கு தற்போது 38 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.