38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்!!

348

இந்தியாவில்..

38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் சியோனா சனா மரணமடைந்துள்ளார். தனது 76வது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. சியோனா சனா 1945 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பிறந்துள்ளார்.

அவர் தனது 17 ஆவது வயதில் தன்னைவிட மூன்று வயது மூத்தவரான ஜாதியாங்கியை முதல் மனைவியாக திருமணம் செய்தார். உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரரான அவர் சமீபகாலமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சியோனா மறைவுக்கு மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகளுடன், உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் திரு. சியோன் நம்மிடம் இருந்து விடைபெற்றார்.

அவரது கிராமம் பக்தாங் தலாங்னுவம் அவரின் குடும்பம் காரணமாக மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. உங்கள் ஆத்மா அமைதி கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.