4 ஆண்டுகளாக குழந்தை இல்லை : சமந்தா விவாகரத்து காரணம் என்ன?

499

சமந்தா…

முன்னணி நடிகைகள் பலர் திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கை பார்ப்பார்கள்.

ஆனால் முன்னணி நடிகையாக தென்ன்ந்திய சினிமாவில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா பிரபு. சினிமாவில் அறிமுகமாகி சில சர்ச்சையில் சிக்கினாலும் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 10 வருடங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். 2017க்கு பிறகு சமந்தா நாக சைதன்யா தாங்கள் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டோம்.

தற்போது அந்த வாழ்க்கையை நிறுத்திக்கொள்வதாக கூறி உண்மையான அறிவிப்பை கொடுத்தனர். இதுபற்றி பல விவாதங்கள் கேள்விகள் எழுந்து வந்த நிலையில், சமந்தா நாகசைதன்யா பிரிவுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒன்றாக, திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதுவே அவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்தும் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பக்குவத்துக்கு சமந்தா வராததால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நாக சைதன்யா தடை போட்டதாகவும், அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வருகிறார்.

அதில், அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இறுதியில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.