4 மாத கைக் குழந்தையுடன் காதலனுடன் மாயமான இளம் பெண் : நடந்த விபரீதம்!!

298

கரூர்..

கரூர் அருகே கணவன் மற்றும் 6 வயது மகனை விட்டுவிட்டு காதலுடன் 4 வயது மற்றும் 4 மாத கை குழந்தையுடன் மாயமான இளம் பெண் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு காதலுடன் சிக்கினார்.

கரூர் மாவட்டம் வரவணையை அடுத்த பாப்பனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30 ). பொக்லின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வெள்ளைபட்டியை சேர்ந்த பிரித்தா (26) என்பவருடன் 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 6 வயது மகனும், 4 வயது மகளும், 4 மாத கைக் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும், பிரித்தாவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார் கோவிந்தராஜ். அப்போது வீட்டில் 6 வயது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். 4 வயது மகளும், 4 மாத கை குழந்தையும், மனைவி ப்ரித்தாவையும் காணவில்லை.

இது தொடர்பாக உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார். அவர்கள் கிடைக்காததால் அருகில் உள்ள சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் மனைவி, 2 மகள்களை காணவில்லை என்றும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிந்தாமணிபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணையும், குழந்தைகளையும் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் திருப்பூர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசார் முகாமிட்டு தேடினர்.

ஆனால், அங்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சென்னை மதுரவாயல் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுத்த குறுஞ்செய்தி வந்ததன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸ் குழுவினர் அவர்களை தேடி கண்டுபிடித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு திரண்டிருந்த கோவிந்தராஜ் மற்றும் உறவினர்கள், அவர்களை தங்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டதுடன், மணிகண்டனையும் சேர்த்து அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் உதவி ஆய்வாளர் சித்ரா தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரித்தா குழந்தைகளுடன் கணவருடன் செல்ல சம்மந்தம் தெரிவித்தார். அவரை அழைத்துச் சென்ற காதலன் மணிகண்டன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரித்தா குழந்தைகளுடன் குளித்தலையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கணவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், முறையற்ற உறவால் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிய சம்பவத்தில் திருமணமான பெண் பிரித்தா மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என மணிகண்டனின் தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.