4 ஆண்டுகள் பிரிவு… கணவருடன் சேர்ந்து வாழ நினைத்த மனைவிக்கு நேர்ந்த துயரம் : கண்ணீர் வடிக்கும் இளம்பெண்!!

342

சென்னை….

இந்தியாவில் 4 ஆண்டுகளாக பிரிந்த கணவரை பார்க்க சென்ற இளம்பெண் ரயிலில் சிக்கி கை, கால் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் வசித்து வருபவர் சர்மிளா. இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

சர்மிளாவின் கணவர் தற்போது திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சர்மிளா குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவரோடு மீண்டும் சேர்ந்து வாழ ரயிலில் திண்டுக்கல் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டி.டி.ஆர் டிக்கெட் பரிசோதனை செய்தபோது இவரது டிக்கெட் வெயிட்டிங்கில் இருப்பது தெரியவந்தது. அதனால் ஷர்மிளாவை டி.டி.ஆர் பொது பயணப் பெட்டிக்கு செல்ல கூறியுள்ளார்.

இதையடுத்து இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த சர்மிளா மேல்மருவத்தூர் நிறுத்தத்தில் இறங்கி பொது பயணப்பெட்டிக்கு மாறும் போது எதிர்பாராதவிதமாக ரயிலில் சிக்கி கொண்டார். இந்த விபத்தில் சர்மிளாவின் இடது கால் மற்றும் இடது கை துண்டானது.

இதையடுத்து அவர் உடனடியாக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவருக்கு இடது கால் மற்றும் இடது கை துண்டான நிலையில், வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

4 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவனை பார்க்க சென்ற இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.