40 வயது குறைந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 68 வயது திமுக நிர்வாகி!!

301

40 வயது குறைந்த பெண்ணை..

தமிழகத்தில் பேத்தி வயது பெண்ண காதலித்து திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் குறைந்த வயதுடைய பெண்ணை, அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆணும், அதிக வயதுடைய பெண்ணை, குறைந்த வயதுடைய ஆணும் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

குறிப்பாக இந்தோனேஷியாவில் இது போன்ற திருமணங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படும். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 68 வயது மதிக்கத்த திமுக நிர்வாகி 28 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை சாவல் பூண்டியை சேர்ந்தவர் மா.சுந்தரேசன்(68). இவர் பல ஆண்டுகளாக திமுகவில் நிர்வாகியாக இருக்கிறார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.

சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை பதவி வகித்திருக்கும் இவர் ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசி சாவல் பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாகி வருகிறார் சுந்தரேசன்.

இந்நிலையில் தான் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அதன் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கியுள்ளனர்.

மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சுந்தரேசன் திடீரென்று அவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் சுந்தேரசன் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட அபிதாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.