40 வயது பெண்ணுக்கு 8 முறை கருக்கலைப்பு: ஆண் குழந்தை வேண்டி கணவன் செய்த கொ.டூ.ர செயல்கள்!!

338

இந்தியா…

இந்தியாவில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 40வயது மனைவியை கட்டாயப்படுத்தி 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண், பெண் என இரு பாலர்களும் சமம் என்று சொல்லும் காலத்தில் இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி. மும்பையின் தாதர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் மீண்டும் 2011ஆம் ஆண்டு கர்ப்பம் அடைந்த போது அவரது கணவர் தமது சொத்துக்களை பாதுகாக்க ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்ள மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிய வர மனைவியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.

இது போல 8 முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தாய்லாந்திற்கு அழைத்து சென்று இந்தியாவில் தடை செய்யப்பட்ட 500 ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் கொடூரத்தை தாங்க முடியாத பெண் அவர் மீது புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது கணவர் கட்டாயப்படுகித்தி சிகிச்சை மேற்கொண்டதாகவும் 8 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.