43 வயதில் திருமணம் செய்து கொள்ளும் நடிகர் மற்றும் பிக்பாஸ் புகழ் சினேகன்!

696

சினேகன்…

பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுரகில் முன்னணி பாடலாசிரியாக இருப்பவர் சினேகன். பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப், சூரறைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன்.

அதோடு யோகி, உயர்திரு 420, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துக் கொண்டு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதை தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில் 43 வயதான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திருமணம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.