45 வயது பெண்ணை மிரட்டி 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை : அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!!

314

புதுகோட்டை…

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர் அதே பகுதியில் கண்மாய் அருகே ஆடு மோய்ந்துக்கொண்டிருந்த 45 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேந்திரனை போலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இச்சம்பவம் குறித்து வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிக்கு நீதிபதி சத்யா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும் அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து சுரேந்திரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.