வகுப்புக்கள்………
இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்களை தொடர்வதற்கு,
4G கவரேஜை பெற்றுக்கொள்ளும் நோக்கில் காடு மேடுகளில் அலைந்து படிக்கும் காட்சிள் சமூக வைஅத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை அனைத்து வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காத மாணவர்களுக்கு மத்தியில் கல்வியில் ஆர்வமுள்ள இவ்வாறான பிள்ளைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பலரும் கூறிவருகின்றனர்.