5 நாட்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தையை மூன்று லட்சத்துக்கு பேரம் பேசி விற்ற தாய் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

1153

நாமக்கல்……

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி.. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளங் குழந்தையை ரூ.3,00,000 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனை செய்ய அந்த பெண்ணின் உறவினரான வளர்மதி என்பவர் குழந்தையை சேலத்துக்கு எடுத்து வந்துள்ளார்.

குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக சேலம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.. இதனால், போலீசாரும் மப்டியில் அந்தப்பகுதியில் கண்காணித்தனர்.. அப்போதுதான், அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.. இறுதியில் லதா 35, வளர்மதி 25, அவர் கணவர் மதியழகன் 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்… இவர்களை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது… இந்நிலையில், குழந்தையின் அம்மா கஸ்தூரி, மற்றும் அவரது சகோதரி காயத்ரி ஆகியோரை திருச்செங்கோட்டில் இருந்து சேலம் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது, குழந்தை விற்பனை கும்பல் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காயத்ரியின் கணவர் பெயர் ராமராஜன்.. விவசாயம் செய்து வருகிறார். காயத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்… இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது… இவர்கள் வீட்டில் காயத்ரியின் தங்கை கஸ்தூரி வந்து தங்கினார்.. கஸ்தூரிக்கு 23 வயதாகிறது.. ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், ராமராஜனை தன்பிடியில் வளைத்து கொண்டார்.. இந்த விஷயம் தெரிரந்து காயத்ரி அதிர்ந்து போனார்.. அதனால், அந்தவீட்டை விட்டு காயத்ரி வெளியேறி, திருச்செங்கோட்டில் தங்கியிருந்து, தறித்தொழில் செய்து வருகிறார்.

இது கஸ்தூரிக்கு வசதியாக போய்விட்டது.. இதற்கு பிறகு, கஸ்தூரிக்கு 4 மற்றும் 3 வயதில் பெண் குழந்தைகள் பிறந்தன… 3வதாக கஸ்தூரி கர்ப்பமானார்.. இந்த சமயத்தில்தான், கஸ்தூரியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.. இது தொடர்பாக ராமராஜன் – கஸ்தூரி இடையே தகராறு வெடித்து, 6 மாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி, திருச்செங்கோட்டில் உள்ள காயத்ரி வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.. இந்த அக்கா – தங்கைக்கு, குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த வளர்மதி என்பவர் அறிமுகமானார்.. அவருக்கு கஸ்தூரியை மிகவும் பிடித்துவிட்டது.. அதனால், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து ஸ்பெஷலாக கவனித்துக்கொண்டார்.

வீட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.. விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடுமாறு வளர்மதி கேட்டாராம்.. அதற்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்.. கஸ்தூரிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால், 3வதாக பிறக்க போகும் குழந்தையை வளர்மதியிடமே கொடுக்க சம்மதித்துள்ளார்.. கடந்த வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கஸ்தூரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கரெக்ட்டாக வளர்மதி வந்த நின்றார்.. ஏற்கனவே பேசியபடி, குழந்தையை வாங்கிக்கொண்டு, புரோக்கர் லதாவுடன் சேலம் வந்திருக்கிறார்.. ரூ.5 லட்சத்திற்கு சேலத்தை சேர்ந்த விவசாயி அன்புவிடம் விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளார். இதற்காக அட்வான்ஸாக ரூ.38 ஆயிரம் பெற்றுள்ளார்… இவ்வளவு பேரமும் நடந்து முடிந்து, அன்புவிடம் கொடுப்பதற்காக குழந்தையை கொண்டுவந்தபோதுதான், போலீசார் அவர்களை மொத்தமாக ரவுண்டு கட்டி மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து கஸ்தூரி சொல்லும்போது, “கணவர் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார். அவரது அடி என்னால் தாங்க முடியல.. அதனால் அக்கா வீட்டுக்கு வந்தேன். வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் என் அக்காவுக்கு கூட தெரியாமல் வளர்மதியிடம் குழந்தையை கொடுத்தேன்… தப்பு செய்துட்டேன்..

என் குழந்தையை என்கிட்டயே கொடுத்து விடுங்கள்.. இனிமேல் நானே வளர்க்கிறேன்’ என்று போலீசாரிடம் கெஞ்சினாராம்.. இந்நிலையில், கஸ்தூரி, காயத்ரி ஆகியோரை போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். குழந்தையை தாயிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.