52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

922

நெல்லை…..

நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், தனிமையில் சந்தித்து பழக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நள்ளிரவில் திடீரென விழித்து கொண்ட ஆல்பர்ட் தன்னுடன் வந்த சவுண்ட் சத்யா காணாமல் போனதையும், தன்னுடைய 9 சவரன் நகைகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த பெண்ணின் செல்போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்ட போது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்