53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!

911

ராஜஸ்தானில் தனிமையில் இருந்த விதவை தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) என்பவரது கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்துபோனார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு கீதா மட்டுமின்றி சன்ஹிடாவின் அக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மனம் தளராத சன்ஹிடா தொடர்ந்து பேசி தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார்.

அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துவைத்து, அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தின் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக சன்ஹிடா தெரிவித்துள்ளார்.