59 வயது நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. யார் தெரியுமா?

313

ஐஸ்வர்யா ராஜேஷ்….

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டகத்தி படத்தின் மூலம் தெரிய துவங்கிய இவர், காக்க முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு மற்றும் பூமிகா ஆகிய இரண்டு படங்களுமே சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறாராம்.