குண்டு மனிதர்
உலகின் குண்டு மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மெக்ஸிக்கோ நாட்டவர் தற்போது அவரது உடல் எடையின் சரிபாதி அளவுக்கு குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிக்கோ நாட்டவரான 32 வயது ஜுவான் பெட்ரோ பிராங்கோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 590 கிலோ உடல் எடையுடன் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வந்துள்ளார்.
நீண்ட இரண்டு ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் உயிர் காக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜுவான், தற்போது சரிபாதி அளவுக்கு எடையை குறைத்துள்ளார்.
அதீத உடல் எடை காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜுவான் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட முடியாமல் தவித்து வந்தார். மருத்துவர்கள் மேற்கொண்ட உயிர் காக்கும் சிக்கிசைக்கு பின்னர் தற்போது 298 கிலோ அளவுக்கு உடல் எடையை கொண்டு வந்துள்ளனர்.
மட்டுமின்றி நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையும் எடுத்து வருகிறார். இருப்பினும் இன்னும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், மேலும் 146 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அப்போது மட்டுமே அவரால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் சுமார் 75 சதவிகித வயிற்றுப்பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
அப்போதிலிருந்தே கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார் ஜுவான். தம்மிடம் போதிய பணம் இல்லை என்பதாலையே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாமல் போனது என கூறும் ஜுவான், அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் சாலைகளில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.