தூத்துக்குடி…..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. அதே ஊரில் வசித்து வருபவர் காளிமுத்து மகன் பாலமுருகன். இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.
கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் 6 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துள்ளது. பலமுறை எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் உறுதியளித்ததாக எபிலாதேவி தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலமுருகன் தற்பொழுது எபிலாதேவியை திருமணம் செய்ய மறுத்த பாலமுருகன் நவம்பர் 7ம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்யமால் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் எபிலாதேவி, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலமுருகன் உறவினர் ஒருவர் காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய காதலன் பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி எபிலாதேவி கயத்தார் தாலூகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எபிலாதேவியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பனிடம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காதலித்தவரை மணக்க இளம்பெண் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அந்த பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாக இருந்தது.