6 மாதத்தில் 42 கிலோ குறைத்த பெண்!!

1273

96 கிலோ உடல் எடையால் அவதிப்பட்டு வந்த 20 வயதான அர்பிதா அகர்வால் 6 மாதம் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் 42 கிலோ எடை குறைத்துள்ளார். எடை அதிகமாக இருப்பதால் என்னால் சரியாக நடந்துசெல்ல முடியாது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பானி பூரி, ஐஸ்க்ரீமும் எனது டயட் பட்டியலில் இருந்தது.

காலை : ஓட்ஸ், மோர், ரொட்டியுடன் சேர்த்து வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட வெண்ணெய். மதியம்: சப்பாத்தி, மோர், பருப்பு மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட். இரவு: காய்கறி சூப், ப்ரவுன் அரிசி மற்றும் சாலட், இதில் என்றாவது ஒருநாள் எனக்கு பிடித்த பானிபூரி மற்றும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவேன்.

15 நிமிடம் கார்டியோ பயிற்சி, 1 மணிநேரம் எடை பயிற்சி மற்றும் கிராஸ்பிட்(weight training and CrossFit) மேற்கொள்வேன். இடைப்பட்ட நேரத்தில், நடைபயிற்சி, நீச்சல், குதித்தல் ஆகிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்.

துரித உணவுகளை சுத்தமாக நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக, நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொண்டேன்.

குறிப்பாக உடற்பயிற்சிகளை காலையில் செய்வதையே வழக்கமாக கொள்ளுங்கள்.