6 வருடம் குழந்தை இல்லை.. இளைஞனுடன் மனைவி கள்ளக்காதல் : கணவன் எடுத்த விபரீத முடிவு!!

470

தெலுங்கானா…

திருமணத்துக்கு புறம்பான உறவை துண்டிக்க சொல்லி கணவன் எவ்வளவு கேட்டும் மனைவி அதை பொருட்படுத்தாதால் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கொலை கொள்ளை போன்ற செய்திகளை நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.

பெரும்பாலும் கொலை அல்லது தற்கொலை பின்னாணியை ஆராயும்போது பெரும்பாலும் கள்ளக்காதல் கொலையாகவே அவைகள் இருந்து வருவதுதான் நிதர்சனமாக உள்ளது. இந்த வரிசையில் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியால் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் தேவம்மா, இவருக்கு 3 மகன்கள் இருந்தனர், அவர்கள் சிறுவயதில் இருக்கும் போதே தந்தையை இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுமே தாய் தான் தேவம்மாதான் வளர்த்தார்.

இந்நிலையில் அவரது இளைய மகன் கங்காதர் (35) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தம்மா என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, ஆனால் திருமணமாகி 2 ஆண்டுகளில் திருபதம்ம நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் சோகத்தில் மூழ்கினார் கங்காதர், ஒருகட்டத்தில் அவரது தாய் தேவம்மா பெகடபள்ளி மண்டல் நாஞ்சார் பகுதியை சேர்ந்த மம்தாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கிராமப்புறத்தில் விவசாய கூலி வேலை செய்து, சமூகப் பணிகளில் ஈடுபட்டு அப்பகுதியில் நல்ல பெயர் எடுத்து வந்தார் கங்காதர். ஆனால் இதுவை இரண்டாவது மனைவியுடன் திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் அந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.

இச்சமயத்தில் மங்தாவுக்கு ஜெய்போத்துலவை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது பின்னர் அது கள்ளக் காதலாக மாறியது, கணவன் வீட்டில் இல்லாத போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இது கணவர் கங்காதருக்கு தெரியவந்தது.

இந்த தகாத உறவை கைவிடவேண்டும் என அவர் மனைவி மம்தாவை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை , இந்நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி மனைவி மம்தா காதலன் அபிஷேக் உடன் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்தபோது கணவர் கங்காதரிடம் சிக்கினர்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அபிஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் கங்காதர் வீட்டிற்கே வந்து தகராறு செய்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் மனமுடைந்த கங்காதர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகனின் உடலை பார்த்த தேவம்மா கதறி அழுதார். தனது மருமகளின் தகாத உறவை தவிர்க்க தன்மகன் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்காததால் தன் மகன் அநியாயமாக தற்கொலை செய்து கொண்டார்.

தன் மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இரண்டாவது மனைவி மம்தா மற்றும் கள்ளக்காதலன் அபிஷேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.