மைசூரு….
மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார்.
பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகத்துக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதால் அவரும் இறந்துவிட்டார்.
இதன்பின்னர் அந்த வீட்டிற்குள்ளேயே தனியாகவே வசித்து வந்துள்ளார். தனிமை அவரை வாட்டியதனால் தனக்கு ஒரு துணை தேவை என்று முஸ்தபா உணர்ந்தார்.
இதையடுத்து அதே பகுதியில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65 வயது) என்ற பாட்டியை சந்தித்தார். அவரும் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
வயதான காலத்தில் துணைகளை இழந்த இருவரும், நன்றாக பழகி வந்துள்ளனர்.. ஒருநாள், தன்னுடைய விருப்பத்தை சொல்லியுள்ளார்.
எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது.. நமக்கு இப்போதுதான் ஒரு துணை தேவை.. நமக்குள் நல்ல புரிதலும் உள்ளது.. இருவரும் கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாமா?” என்று கேட்டுள்ளார். இதற்கு பாட்டியும் சம்மதம் சொல்லியுள்ளார்.
இந்த திருமணத்துக்கு தங்கள் பிள்ளைகளின் சம்மதம் தான் முக்கியம் என்று முஸ்தா தன்னுடைய வீட்டில் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரிடமும் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
அவர்கள் அனைவருமே தாத்தாவின் விருப்பத்திற்கு ஓகே சொன்னார்கள்.. இதையடுத்து, இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்ட மகன்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள், முன்னிலையில்தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று முஸ்தபா விரும்பினார்.
அதன்படியே அனைத்து குடும்ப உறுப்பினர்களும் முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். புதுமண தம்பதியிடம், மொத்த குடும்பத்தினரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். இப்போது மணமக்கள் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை துவங்கி உள்ளனர். இச்சம்பவம் அங்கு இருப்பவர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.