7 வயது சிறுமியை கொலை செய்த பெண் : தகாத உறவால் வந்த வினை!!

884

 

தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன்.

இவரது 7 வயது மகளான தனிஷ்கா சமீபத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சிறுமியின் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது அதே பகுதியை சேர்ந்த வனிதா என்பவர் தனிஷ்காவை கொலை செய்தது தெரியவந்தது.

வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும், சண்முகநாதன் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாகவும், கமலகண்ணன் தனது குழந்தையை கவனிக்காமல் வனிதாவின் குழந்தையை கவனித்து வந்ததால் ஆத்திரமடைந்து தனிஷ்காவின் கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வனிதாவை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.