7 வயது சிறுவனுக்கு வந்த 77 வயது நபரின் கடிதம் : 17 வயதில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

810

காத்திருந்த இன்ப அதிர்ச்சி

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் தான் யார் என்றே சொல்லிக் கொள்ளாமல் 7 வயது சிறுவனை படிக்க உதவிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவன் தீமோத்தி. அப்போது 7 வயது இருந்த போது, தன் குடும்பத்தினுடைய சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் தவித்து வந்துள்ளான்.

ஆனால் அந்த சிறுவனுக்கோ நன்றாக படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. இது போன்ற நிலையில் தான், அந்த சிறுவனின் கிராமத்திற்கு Compassion International என்னும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் வந்து அங்கு ஏழ்மையில் இருக்கும், குழந்தைகளின் விவரங்கள் போன்றவைகளை சேகரித்து சென்றது.

அப்போது அந்த சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை, அதன் பின்னரே தீமோத்தி உட்பட பல சிறுவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் மூலம் படிக்க வைக்கப் போகின்ற விடயம் தெரிந்துள்ளது.

இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த தீமோத்தி, தன்னை யார் படிக்க வைப்பார்கள்? ஸ்பான்ஸர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்த போது, அவரை படிக்க வைக்க ஸ்பான்சர் நிறுவன் முன்வந்துள்ளது.

இதையடுத்து தீமோத்தியும் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கினான். இப்படி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, தீமோத்திக்கு ஸ்பான்சர் எழுதியிருந்த கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்த கடித்தத்தில், டியர் டிமோத்தி, நான் வாக்கர் எனக்கு 77 வயதாகிவிட்டது, என்னை உன் நண்பனாக ஏற்றுக் கொள்வாயா? எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும், நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறேன், நன்றாக படி என்று கூறி முடிந்துள்ளது.

இதைக் கண்ட சிறுவன் ஆனந்த கண்ணீர்விட்டுள்ளான். அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் கடிதம் எழுதி நட்பை வளர்த்து கொண்டனர். கடந்த 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் தீமோத்தி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற பின், தான் ஸ்பான்சர் வாக்கரை பார்க்க வேண்டும் என்று கூற, அதன் பின் தொண்டு ஊழியர்கள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் வாக்கர் என்பவர் வேறு யாருமில்லை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் H.W புஷ் தான் என்று கூறியுள்ளனர்.

2010-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை Compassion International வெளியிட்டுள்ளது. பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் பெயர் மற்றும் வயது போன்றவைகள் குறித்து தெரிவிக்கவில்லை.

மேலும் புஷ் மறைவுக்கு பின் அந்த தொண்டு நிறுவனம் தீமோத்தியை தொடர்பு கொள்ள முயன்றதாம், ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வைரலாகியதைத் தொடர்ந்து, ஜார்ஜ் புஷ் குடும்பமும் தீமோத்தியை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.