இத்தாலி…
இத்தாலி நாட்டில் வரீஸ் மகாணத்தை சேர்ந்தவர் டேவிட் மைடோனி.40 வயதான இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளான்.இதற்கிடையே டேவிட் க்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.ஒரு கட்டத்தில் டேவிட் மீது அவரது மனைவி குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து டேவிட் பைடோனிடம் இருந்து விவாகரத்து வாங்குவதாக முடிவு செய்த அவரது மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்ததாக தெரிகிறது.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகனும் தாயும் மட்டும் தனி அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதில் டேவிட் அலுவலகத்தில் சக நண்பரை கத்தியால் குத்த முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவர் விவாகரத்து வழக்கின் போது கடந்த புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய 7 வயது மகனுடன் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட வேண்டும், என மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என டேவிட் பைடோனி வைத்த கோரிக்கையை ஏற்று,
நீதிபதி அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்.இருப்பினும் டேவிட் பைடோனின் மகன் தனது தந்தையிடம் செல்வதில் விருப்பமற்றவராக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது தந்தையிடம் செல்ல மாட்டேன் என அச்சிறுவன் தனது தாயிடமும், தாத்தா, பாட்டியிடமும் கெஞ்சியிருக்கிறார்.
இருப்பினும் நீதிமன்றம் ஆணையிட்டதால் வேறு வழியின்றி அவனை சமாதானப்படுத்தி அவர்கள் தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டுக்கு வந்த தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த டேவிட் பைடோனி. சிறுவனின் உடலை அலமாரியில் மறைத்து வைத்துவிட்டு.
தனது மனைவியின் வீட்டுக்கு சென்று உனது மகனை திரும்ப அழைத்து வந்துள்ளேன் என கூறி வெளியே வரவழைத்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் பயந்து போன டேவிட் பைடோனி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
இருப்பினும் காரில் சென்ற டேவிட் பைடோனியை சேஸிங் செய்து இத்தாலி போலீசார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்திய பின்னர், அவரின் மனைவியின் மொபைலுக்கு அனுப்பிய மெசேஜ்களில், என்னுடைய வாழ்க்கையை நீ நாசம் செய்ததாலும்,
என் மகனை பிரிக்க முயன்றதாலும் உன்னை குத்தியதாக மெசேஜ் அனுப்பியிருந்தார்இச்சம்பவம் குறித்து கொல்லப்பட்ட சிறுவனின் தாத்தா கூறுகையில்,
அவன் தனது தந்தையிடம் செல்வதில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தான். நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஆனால் அது பெரிய தவறாகி போய்விட்டது. நான் அவனை அனுப்பியிருக்கக் கூடாது என அழுதவாறே பேசினார்.