8ம் வகுப்பு மாணவிக்கு இளைஞரால் நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரம்.. வெளியான சிசிடிவி காட்சி!

394

இந்தியாவின்..

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 19ம் திகதி Gopalganj மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாணவிக்கு பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்த இளைஞர், மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 19ம் திகதி மாணவி பள்ளி முடிந்து இரண்டு நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, மற்றொரு நண்பருடன் வழிமறித்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக Gopalganj-யில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்னாவில் உள்ள மருத்துவமனை கல்லூரிக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் குற்றவாளி தொடர்ந்து தவறாக நடக்க முயன்று தொல்லை செய்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.