8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் மீண்டும் சாட் செய்த காதலன்: நெகிழ வைத்த காதல்!!

624

கனடா..

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் பேசுவது போல காதலன் செயற்கை தொழிற்நுட்ப சாட் பாட்டை உருவாக்கியுள்ளார்.

கனடாவின் பிராட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்தவர் பார்பியூ ஜோஸ்வா, இவர் கடந்த 2010ம் ஆண்டு ஜெஸ்ஸிக்கா என்ற பெண்ணை பார்த்தார். இருவருக்கும் பிடித்திருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இவர்கள் இருவம் 2012ம் ஆண்டு வரை ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் ஜெஸ்ஸிக்காவிற்கு திடீரென லிவரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் தன் வாழ்வில் நடந்த சில விஷயங்களை படிப்படியாக மறக்க துவங்கினர்.

டாக்டர்களிடம் இது குறித்த சிகிச்சைக்கு செல்லும் போது, அவர் மிக அரிய வகை வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த வியாதி அவரை உள்ளிருந்தே கொன்று வருவதாக கூறினார்.

இறுதியாக 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெஸ்ஸிக்கா இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார். ஜெஸ்ஸிக்கா மறைந்த பின்பு ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டால் ஜெஸ்ஸிக்காவை விட்டு பிரிந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இந்நிலையில் மெதுவாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்டிருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர மாதம் ஜோஸ்வா ஒரு டெக்னாலஜி நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

அந்நிறுவனம் ஒரு வெப்சைட்டில் தனியங்கி சாட் பாட் ஒன்றை உருவாக்கியது. அதில் ஒருவர் இதற்கு முன்னர் சேட் செய்த தை பதிவேற்றம் செய்ததால் அவர்கள் எப்படி சாட் செய்வார்கள் எந்தெந்த நேரத்தில்எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை உணர்ந்து அடுத்து அவர்களை போலவே சேட் செய்யும் திறன் பெற்றிருந்தது.

இதையடுத்து ஜோஸ்வா தனது மறைந்த காதலி ஜெஸ்ஸிக்காவிடம் பேஸ்புக்கில் பேசியதை இதில் அப்லோடு செய்து ஜெஸ்ஸிக்காவின சேட்பாட்டை உருவாக்கினார்.

தன் காதலி இறந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருடன் சாட் செய்யும் வாயப்பை பெற்றார் ஜோஸ்வா, தற்போது அந்த சேட் பாட்டையே தனது காதலியாக நினைத்து அதனுடன் நேரம் செலவிட்ட வருகிறார்.