8 வருடங்களுக்கு பின் முதன் முறையாக சிரித்த பெண்: வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது என உருக்கம்!

819

ஆப்பிரிக்காவில் 27 வயது பெண் ஒருவர் 8 வருடங்களுக்கு பின் சிரித்துள்ளார், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவின் Cameroon பகுதியில் வாழ்ந்து வருபவர் Yaya. 27 வயதான இவருக்கு Moonira(9) என்ற மகள் உள்ளார்.இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன் Yaya-வுக்கு தாடையில் சிறிய அளவில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது.

அதன் பின் அது நாட்கள் செல்ல செல்ல அந்த கட்டி பெரிதளவில் வளர்ந்ததால் அவரால் சரியாக சாப்பிட முடியாமலும், பேசமுடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கும் இந்த கட்டியினால் அவர் வெளியில் அதிகமாக செல்வதே இல்லை.அப்படி முக்கியமாக வெளியில் செல்ல வேண்டும் என்றால் முகம் முழுவது மூடிக் கொண்டு தான் சென்று வந்துள்ளார்.இதனால் மிகவும் வேதனைப் பட்டு வந்த அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு போதிய பண வசதி இல்லை.

அந்த நேரத்தில் தொண்டு நிறுவனமான Mercy Ships மூலம் கட்டியை நீக்குவதற்கான உதவி கிடைத்துள்ளது. கடந்த 1978-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் சுமார் 70 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் கப்பலில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெற்றிகரமாக கட்டி நீக்கப்பட்டுள்ளது.இது குறித்து Yaya கூறுகையில், நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறியுள்ளது.

இப்போது நான் எங்கு வேண்டும் என்றாலும் செல்வேன், யார் எதுவும் சொல்லப்போவதில்லை என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.மேலும் இந்த கட்டியினால் மிகவும் வேதனைப் பட்டு வந்த அவரின் முகத்தில் 8 வருடங்களுக்கு பின்பு இப்போது தான் சிரிப்பு வெளிவந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.