8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள்… 2 மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை : கதறும் குடும்பம்!!

508

அம்பிகாபூர் ….

எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல்.

அம்மாநிலத்தில் அம்பிகாபூர் பகுதியில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்த அந்த 8 வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக அதே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உள்பட 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

இதை அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஒரு நாள் அச்சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் அந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கூட்டுக் குடும்பம் என்பதால் அதே வீட்டில் இருந்த ஆறு சிறுவர்கள் உள்ளிட்ட 7 சிறுவர்கள் தினமும் ஆன்லைன் பாடம் படிக்கிறோம் என்றுசொல்லி செல்போனில் ஆபாச படத்தை பார்த்து வந்திருக்கிறார்கள்.

அதில் தாங்கள் பார்த்ததை செய்து பார்க்க நினைத்து தான் வீட்டில் இருந்து 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார்கள். அதன் பின்னர்தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.

சிறுவர்கள் என்பதால் வீட்டினர் யாரும் கவனிக்காததால் பெரியவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறுவர்கள் பயன்படுத்திய செல்போனை குடும்பத்தினர் வாங்கி பார்த்திருக்கிறார்கள்.

அந்த செல்போனில் பல ஆபாச வீடியோக்கள் இருந்திருக்கின்றன . இது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் 7 சிறுவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த ஏழு சிறுவர்களும் ஆறு வயது முதல் 13 வயது நிரம்பியவர்கள் என்பதால் அவர்கள் குழந்தை ஆணையம் குழந்தைகள் ஆணையம் முன்பாக ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏழு சிறுவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.