9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் : நிலைகுலைந்த பெற்றோர்!!

368

சென்னை…

சென்னை ராயபுரம் அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிறுமியின் தாய் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.14 வயது மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டதும் தாயார் துடிதுடித்து போயுள்ளார்.

அதனை அடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்று விசாரித்ததில், மின்சார வாரியத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகரன் (48) என்பது தெரிய வந்தது.

ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியை ராஜசேகரன் மிரட்டி பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.உடனே சிறுமியின் தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜசேகரை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் மகள்களின் நடவடிக்கைகளை கவனித்து வருவதுடன், அவர்களுக்கு ஆபத்து நேரிடும் நேரத்தில் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என கற்று தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.