900 வருட பழமையான பிரம்மாண்ட விடுதியை விலைக்கு வாங்கிய முகேஷ் அம்பானி- விலை எத்தனை கோடி தெரியுமா?

653

விடுதி…………….

900 வருட பழமையான ஆடம்பர விடுதியை விலைக்கு வாங்கிய முகேஷ் அம்பானி அசரவைத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனரான முகேஷ் அம்பானி இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டோக் பார்க் ஆடம்பர விடுதியை விலைக்கு வாங்கியுள்ளார்.

மேலும், இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.

Buckinghamshireல் 300 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே 49 படுக்கையறைகளுடன் அமைந்துள்ள இந்த ஆடம்பர விடுதி பழைமை வாய்ந்ததாகும்.

தோட்டத்தில் கோல்ப் திடல், 13 டென்னிஸ் ஆடுகளங்கள், 14 ஏக்கரில் அரியவகைத் தாவரங்களுடன் கூடிய பூங்கா ஆகியன உள்ளன. புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் இங்குப் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பது இதன் தனிச் சிறப்பு.

ஸ்டோக் பார்க் எஸ்டேட் 900 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், 1908 வரை இது ஒரு தனியார் இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது என்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த ஆடம்பர விடுதியினை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 57 மில்லியன் பவுண்டுகள் 79 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.