விஜய் சேதுபதி…
ரசிகர்களிடம் இன்று மக்கள் செல்வன் என்று பெயர் வாங்கியிருக்கும் விஜய் சேதுபதி பாஸ்ட் புட் கடையில் வேலை செய்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும், பாடகராகவும், வசனங்கள் எழுதுபவராகவும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கால்ஷீட்டை பிஸியாகவே வைத்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கி கொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
மேலும் சில படங்கள் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவரின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று நல்ல வரவேற்பைப் பெற்றுது.
இன்று மக்கள் செல்வன் என்று பெயர் எடுப்பதற்கு எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் சிறு சிறு துணை வேடங்களிலும் , குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், படிக்கும்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் விஜய்சேதுபதி வேலை பார்த்துள்ள தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அவருக்கு மாத சம்பளம் வெறும் 750 ரூபாய் தான் என்ற தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.