Tattoo போட்டுக் கொண்டு அந்தரங்க பாகங்களை தொடுவார் : கைதான இளைஞர் குறித்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

344

கேரளா….

கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை செய்து வருகிறார்.

இளைஞர்களை கவர்வதற்காக எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜித், பிரபலங்கள் மற்றும் விஐபிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்திருப்பார்.

இந்நிலையில் கடந்த வாரம் 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுஜித் பற்றி பதிவிட இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, டாட்டூ குத்திக் கொள்வதற்காக ஸ்டூடியோவுக்கு சென்ற போது, தனியான இடத்தில் வைத்து டாட்டூ குத்தப்பட்டதாகவும், தன்னை தவறான இடத்தில் தொட நினைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தான் எதிர்ப்பு தெரிவித்த போது, முதுகுத்தண்டில் ஊசியை குத்திவிட்டு வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, சுஜித் ஸ்டுடியோவை மூடிவிட்டு தலைமறைவானார், இந்நிலையில் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த 5ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து பலரும் சுஜித் மீது வன்கொடுமை புகார் அளித்து வருகின்றனர், இந்நிலையில் சுஜித் அப்பாவி என்றும், தொழில் ரீதியாக யாரோ பொறாமையின் காரணமாக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் சுஜித் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.