அக்காவுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற சிறுவன்: நண்பனுடன் சடலமாக கிடந்த துயரம்!!

302

சங்கராபுரம்..

தமிழகத்தில் சகோதரிக்கு சாப்பாடு எடுத்து சென்ற சிறுவன், நண்பனுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

க.ள்.ளக்குறிச்சியின் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன், இவரது மகன் ஜெகதீஸ்வரன்(வயது 10), அதே ஊரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார்.

சகோதரிக்கு சாப்பாடு கொடுத்து வரச்சொல்லி ஜெகதீஸ்வரனை, அவரது குடும்பத்தினர் அனுப்பியுள்ளனர், அப்போது அவரது நண்பன் வெங்கடேஷையும் அழைத்து சென்றுள்ளார்.

ஆனாலும் மாலை வரை இருவரும் வீடு திரும்பாததால் பொலிசில் புகார் அளித்துள்ளனர், இதனையடுத்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சிறுவர்களை தேடியுள்ளனர்.

எங்கு பார்த்தாலும் கிடைக்காத நிலையில், அருகிலிருந்த ஏரியில் இறங்கித் தேடியுள்ளனர், அப்போது ஜெகதீஸ்வரன் அவரது நண்பன் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

சகோதரிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற ஜெகதீஸ்வரன் தனது நண்பர்களை அழைத்துச் சென்றிருக்கலாம் இருவரும் குளிப்பதற்காக ஏரியில் இறங்கி இருக்கலாம் நீச்சல் தெரியாததால் இருவரும் இ.ற.ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்த போதும் மாணவர்கள் இழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் தீவிர வி.சா.ரணை நடத்தி வருகிறார்கள்.