அட இது வித்தியாசமான பொண்ணா இருக்கே.. குடும்பத்தோடு குதூகலிச்ச அனுஷ்கா!!

607

அனுஷ்கா..

அருந்ததி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா தான்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.

இதையடுத்து அனுஷ்காவின் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி அனுஷ்காவின் 48 வது படமாக உருவாக உள்ள அந்த புதிய படத்தை யூவி கிரியேஷன் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று மற்ற நடிகைகளைப் போல செல்ஃபி எடுத்து ஸ்டைலிஷான போட்டோ பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் குடும்பப் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது அனைவர் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.