சேலம்….
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட முப்பனூரில் கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி மற்றும் தம்பி அண்ணாதுரை (60) மகன் கோபால் ஆகியோர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணன் கோவிந்தன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரியிடம் சொத்து பிரித்து தரும்படி அவ்வப்போது அண்ணாதுரை தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சொத்து பிரச்சனை பத்து வருடங்களாக இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று மாதேஸ்வரி பால் வாங்கி கொண்டு வீடு திரும்பிய போது அண்ணாதுரை மதுபோதையில் வழியில் அண்ணியை நிறுத்தி சொத்து கேட்டு தகராறில் ஏடுபட்டுள்ளார்.
பின்னர் கையில் வைத்திருந்த கொடுவாளால் அண்ணியை பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த எடப்பாடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், எடப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக்காக பட்டப்பகலில் அண்ணனின் மனைவியை தம்பியே வெட்டிக் கொன்று தம்பியும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.