அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா கைதாகிறார்?

692

அம்பேத்கார் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் தரக்குறைவான கருத்து பதிவிட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஹர்திக் பாண்டியா தமது டிவிட்டர் பக்கத்தில் அம்பேத்கார் தொடர்பில் தரக்குறைவான பதிவு ஒன்றை பதிவிட்டு, எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கியுள்ளார்.

இதனையடுத்து அம்பேத்காரை தரக்குறைவாக பேசியதாக கூறி அவர் மீது பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாண்டியா தாம்து பதிவில், இவர் தனது டிவிட்டில் ”அம்பேத்கார் யார்? மோசமான சட்டத்தையும், அரசியலமைப்பையும் உருவாக்கியவர்.

அவர் இடஒதுக்கீடு என்னும் நோயை நாடு முழுக்க பரப்பியவர்தானே” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பாண்டிய அந்த டிவிட்டை நீக்கிவிட்டார். இந்த நிலையில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேக்வால் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் காவல்நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த பின்னர் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.