அதிவேகமாக சென்று , மரத்தில் மோதி வீட்டின் மீது தொங்கியபடி நின்ற கார்!!

262

மகேஷ்…

அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ், தனது உறவினர்களுடன் காரில் புதுச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, பரங்கிப்பேட்டை அருகே  அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில்,

சாலையோர மரத்தில் மோதி, அந்தரத்தில் பறந்து சென்று ஒரு வீட்டின் மீது தொங்கியப்படி நின்றது.

வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்த நிலையில், காரில் இருந்த மகேஷ் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.