அம்மாவைக் காப்பாற்ற டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண் : பின்பு நடந்த சம்பவம்!!

620

டிக்டாக்கில் கண்கலங்கிய இளம்பெண்..

டிக்டாக் வீடியோ என்றாலே நெகடிவ்வாக நினைக்கும் நிலையில், அந்த டிக்டாக்கால் தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணவுப்பூர்வமான நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

கர்நாடாக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் 18 வயதான பவித்ரா ஆரபவி. இவரது தாயார் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து வந்துள்ளார். மருத்துவர்கள் டயாலிசிஸை பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு, தினமும் நான்கு விதமான மாத்திரகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரால் வாழ்வது சிரமம் என்ற நிலையில்,

ஊரடங்கு உத்தரவால், அவருக்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதில் அந்த ஊரில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியுள்ளது. பெங்களூரில் கிடைக்கும் மருந்தை வாங்க வழி தெரியாமல் தவித்த பவித்ரா,

வேறு வழியின்றி டிக்டாக் மூலம் கண்கள் கலக்கத்துடனே உதவிகேட்டு ஒரு வீடியோவை தயாரித்து, முதல்வரை உதவும்படி கோரியுள்ளார். அந்த வீடியோ வைரலான சில மணிநேரங்களில் முதல்வர் எடியூரப்பா பார்வைக்கும் சென்றுள்ளது.

இதையடுத்து பவித்திராவுக்கு உதவ எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் நேற்று இரவு 11 மணிக்கு அவரது வீடு தேடிவந்து மருந்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் நெகிழ்ந்து போயுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.