திருவள்ளூர்…
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல முறை பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இந்த தனிமை சந்திப்பு காரணமாக ஏஞ்சல் குளோரி 2 முறை கர்ப்பமானதாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து இவர்கள் காதல் விவகாரம் காதலன் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. பின்னர் காதலின் பெற்றோர் உடனடியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது மட்டுமல்லாமல் முறைப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். பெற்றோர்கள் சொன்னதை கேட்ட மகன் அவர்கள் விருப்பபடி முறைப்பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து கேட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமண விவகாரம் எட்வினின் முன்னாள் காதலி, ஏஞ்சல் குளோரிக்கு தெரியவரவே, காதலனான எட்வினுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த எட்வின், மீண்டும் முன்னாள் காதலியான ஏஞ்சல் குளோரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனைதொடர்ந்து மீண்டும் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
அதன்பின்னர் இருவரும் மீண்டும் அடிக்கடி தனிமையில் சந்திக்க தொடங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஏஞ்சல் குளோரி 3 வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட காதலன் காதலிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் மனவேதனையடைந்த ஏஞ்சல் குளோரி, இது தொடர்பாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் எட்வின் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காதலனை தேடி வருகின்றனர்.