ஆட்டோவில் பயணித்த பெண் கூட்டு பாலியல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

348

வேலூர்…..

வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட சத்துவாச்சாரி காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டதாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் செம போதையில் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறினார்.

அதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதைக்கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அரணி தொடர்ந்து நேற்று மதியம் வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் மனு வந்திருந்தது.

அந்தப் புகாரில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் இரவு காட்சி முடிந்து திரையரங்கு முன் ஆட்டோ காக காத்து இருந்ததாகவும், அவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து அவர்களிடம் இது சரோட்ட தான் எங்கே செல்ல வேண்டும் என கேட்டு அவர்களை ஆட்டோவில் ஏற்றிய தாகவும் கூறியிருந்தது.

மேலும் அவர்கள் ஆட்டோவில் ஏறி தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியதாகவும் ஆனால் அவர்கள் கூறிய இசையில் ஆட்டோ செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றதாகவும் ஏன் என்று கேட்டதற்கு அங்கு சாலையை மறித்து வேலை நடக்கிறது அதனால் பாதையை சுற்றி செல்கிறோம் என ஆட்டோ ஓட்டுனர் கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி அவர்களிடம் அந்த கும்பல் சிறிது தூரம் சென்றதும் கத்தி முனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த தாகவும் அவர்களிடமிருந்து செல்போன்கள் ஏடிஎம் கார்டை பிடுங்கிச் சென்று ஏதோ ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து அந்தப் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் இது வரை எதையும் வெளியே கூறாத நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல்துறையில் பிடிபட்டபோது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூர் டவுன் ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆட்டோ பின்புறம், ஆட்டோ ஓட்டுனரின் ஐடி நம்பர், உரிமையாளர் பெயர் விலாசம், ஆட்டோ ஓட்டுநரின் போன் நம்பர் அதேபோன்று, பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி ஓட்டுநரின் உரிமம் ஆர்.டி.ஓ லைசன்ஸ் ஆகியவை கட்டாயம் டிஸ்பிளே செய்ய வேண்டும் என கட்டுபாடுகள் விதிக்கப்படுள்ளது.

கட்டுபாடுகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும், ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது..

இந்த கூட்டத்தில், வேலூர் டவுன் ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, குடியாத்தம் டி.எஸ்.பி. இராமமூர்த்தி. காட்பாடி டி.எஸ்.பி.பழனி, ஆ.டி.ஓ.செந்தில் வேலன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.