ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக புதிய அவதாரம் எடுகிறார் ஜோதிகா!!

729

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் உருவாகி வருகின்றது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார்.

அதோடு இந்த படத்தில் ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.

ஜோதிகாவின் இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.