ஆபத்தான ஆற்றின் அருகில் நின்ற வாலிபன் அடுத்து நடந்த விபரீதம்!!

1051

பாகிஸ்தானில் தனது தைரியத்தை நிரூபிக்க 19 வயது வாலிபன் ஒருவன் ஆற்றின் அருகில் நின்றபோது தவறி ஆற்றில் விழுந்து அதன் ஆக்ரோஷமான நீரோட்டத்தில் விழுந்து இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கராச்சியை சேர்ந்த ஷெராஸ் கான் (19) என்பவர்தான் இந்த விபத்தில் பலியான வாலிபர் என தெரியவருகிறது.இவர் தனது குடும்பத்தாருடன் ஸ்வாட் வேலி எனும் சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்தனர்.

அந்த வேலி அழகிய நீரோட்டமுள்ள ஆற்று படுகையில் அமைந்துள்ளது. ஸ்வாட் என்பது என்பது இந்த ஆற்றின் பெயர். இந்த ஆறு அருகே இருக்கும் பள்ளத்தாக்கில் விழுந்து மேலும் தனது பயணத்தை தொடர்கிறது.

இந்த ஆபத்தான ஆற்றை சுற்றி பார்க்க வந்த குடும்பத்தார் அன்றுடன் வீட்டிற்கு திரும்புவதாக இருந்தது. அப்போது ஆற்றை சில புகைப்படங்கள் எடுத்து வருவதாக சொல்லி ஷெராஸ் மற்றும் அவரது உறவினர் யாசின் ஆகியோர் சென்றிருக்கின்றனர்.

ஷெராஸிற்கு தண்ணீர் அருகே செல்ல பயமாக இருந்திருக்கிறது. இதனால் அருகில் இருந்த யாசின் ஷெராசை கிண்டல் செய்துள்ளார். நீயெல்லாம் ஒரு ஆண் பையனா என்று அடிக்கடி கிண்டல் செய்யவும் ஷெராஸ் தனது உறவினர் யாசினுக்கு தான் தைரியமானவன் என்பதை நிரூபிக்க வீடியோ எடுக்க சொன்னபடி ஆற்றின் அருகே சென்றிருக்கிறான்.

நடக்கப்போகும் விபரீதத்தை உணராத யாசின் அதனை வீடியோ எடுக்க தொடங்க ஆற்றின் அருகே சென்ற ஷெராஸ் பாறையில் வழுக்கி ஆற்றிற்குள் தவறி விழுந்து ஆற்றின் ஆக்ரோஷ ஓட்டத்தோடு அடித்து செல்லப்பட்டார்.

இதனால் பதறியடித்த யாசின் அல்லா அல்லா என்று கத்தியபடி விடியோவை அணைத்தபடி ஓடுகிறார்.

இதுபற்றி ஷெராஸ் குடும்பத்தார் கூறுகையில் எங்கள் சுற்றுலா இவ்வளவு சோகமாக முடிந்தது வேதனையாக இருக்கிறது. அவனை இழந்த நாங்கள் மிகுந்த துரதிஷ்டசாலிகள் இருப்பினும் விதியை யாரால் தடுக்க முடியும் என்று கூறினர்.